நான் அழுவதில்லை

நான் அழுவதில்லை.
காரணம் ...
எனக்கு வலியில்லை
எனக்கு துக்கமில்லை
எனக்கு துயரமில்லை
எனக்கு சோகமில்லை
-என்று அர்த்தமில்லை.
ஆண் அழுவதற்கு
சமூகத்தில்
உளபூர்வ அனுமதியில்லை
என்பதனால்தான்
நான் அழுவதில்லை.
கொஞ்சம் அனுமதி கொடுத்துப்பாருங்களேன்...
அந்த வான் அழுதால்
இந்த பூமி மட்டும்தான்
சிரிக்கும்.
நான் அழுதால்
இந்த பூமியோடு
சேர்ந்து
அந்த செவ்வாய் கிரகமும்
சிரிக்கும்.