Sunday, 23 February 2014


தப்பு

திருந்தாமல் சாவதும்
சாகும் போது திருந்துவதும்
இரண்டும் ஒன்றுதானே.

தெரியாமல் செய்த
எந்த தப்புக்கும் மன்னிப்பு உண்டு.
தெரிந்தே செய்த தப்பை
மன்னிப்பவனை
மன்னிக்கலாமா.

சில தப்புக்கு காரணமே
மன்னிப்புதான்.
சில தப்புக்கு தண்டனையே
மன்னிப்புத்தான்.

சாவின் விளிம்பில் இருந்துகொண்டு
தப்புக்கு மன்னிப்பு
கோருபவனுக்கு
என்ன சொல்லிவிட முடியும்
’சரி  போய் சேர்’
 என்பதை தவிர.


Saturday, 22 February 2014

எங்க போயிடி தொலஞ்ச

நீ எந்த பாளயத்து குட்டி
கிட்ட வாடி நீயும் ஒட்டி
விலகி போனியே எட்டி
எங் கையில் இப்போ மதுபுட்டி.

பூவ போலவே வந்தே
புயல போலவே போனே
மெளனமாகவே நின்னே
என்ன நீயுந்தான் கொன்னே.

உன்ன காணமலே நானும்
கலங்கி போனேனே நாளும்
என்ன புரிஞ்சுகோனுதான்டி சொன்னேன்
பிரிஞ்சுபோனாடி சொன்னேன்.

என் உசுறு இருக்க வரைக்கும்
ஒன் நினப்பு எனக்கு இருக்கும்
நினச்சு பார்த்தேன்டி பழச
தேத்த முடியலடி மனச.

பார்வ விருந்த கொடுத்தே
என்ன நீயுந்தான்  கெடுத்த
என் உசுர நீயுந்தான் எடுத்து
இப்ப எங்க போயிடி  தொலஞ்ச.

புட்டி ஏந்த வச்சு
என்ன வெட்டியாக  கெடுத்த
அட நீ எந்த பாளயத்து குட்டி
கிட்ட வாடி நீயும் ஒட்டி.