மதியாரை இனம் காண்
மதியாரை இனம் காணும்
அதி மதியே வெகுமதி.
ஒட்டாத கூட்டத்துடன்
மதியாத மனிதர்களை
உதறுவதே மரியாதை.
உதறுவதே மரியாதை.
ஒட்டாதிருப்பதே நல்ல பயன்.
பண்பாடு இல்லாரோடு
வேண்டாம் உடன்பாடு.
பாம்போடு சேர்ந்திருத்தல்
இயலாத பெரும்பாடு.
பண்பின்றி நடப்போரின்
முகம் காணாது விலகு.
மானமுள்ள மனிதருக்கு
அதுவே அழகு.
மெய்யான பொய்யர்களை
குப்பையில் போடு.
நோவுக்கும் செல்லாதே
அவர்தம் சாவுக்கும் செல்லாதே.
செல்லாத காசுகளை
சேர்த்துவைத்து என்ன பயன்.
பண்பாடு இல்லாரோடு
வேண்டாம் உடன்பாடு.
பாம்போடு சேர்ந்திருத்தல்
இயலாத பெரும்பாடு.
பண்பின்றி நடப்போரின்
முகம் காணாது விலகு.
மானமுள்ள மனிதருக்கு
அதுவே அழகு.
மெய்யான பொய்யர்களை
குப்பையில் போடு.
நோவுக்கும் செல்லாதே
அவர்தம் சாவுக்கும் செல்லாதே.