முதுமை
கற்களைகூட சக்கையாக
நொறுக்கியஎன் பற்களுக்கு வாயுடன்
என்ன பகையோ
ஆகிவிட்டதே பொக்கையாக.
மழைகால காட்டருவியாய்
வளர்ந்த என் சிகை,
தலையுடன்
என்ன பகையோ
கோடைகால குட்டையாக
வறண்டுவிட்டதே மொட்டையாக.
வானை தொடுவதுபோல்
நேரான தூண் போன்ற
என் முதுகுக்கு,
பூமியுடன்
என்ன நட்போ
வளைந்துவிட்டதே கூனாக.
சாய்வு நாற்காலியில்
பகல் வெளிச்சமான இரவாகவும்,
இரவு இருட்டான பகலாகவும்,
ஆகி போனபின்...
பசைபோல் ஒட்டிக்கொண்டிருக்கும்
பழைய நினைவுகளை மட்டுமே
ஒயாது அசைபோடும்,
என் மனதுக்கு மட்டும்
இல்லையப்பா
ஓய்வு.