தவறுகளை தண்டியுங்கள்
ஆகையால்...தவறுகளை தண்டியுங்கள்.
எவரும் சொல்லாமல் தானே
ஒரு ரகம்.
சொல்லி திருந்துவது என்பது
மறு ரகம்.
சொன்னாலும் திருந்தாவிட்டால்
கொன்னாலும் தப்பில்லை
என்பது வேறு ரகம்.
கண்டிக்கப்படாத தவறுகள் எல்லாம்
தர்மமாகி போய்விடுகிறது.
மன்னிக்கப்பட்ட தவறுகள் எல்லாம்
மறந்து போய்விடுகிறது.
தண்டிக்கப்பட்ட தவறுகள் மட்டுமே
தடுத்து நிறுத்தப்படுகிறது.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
ஆம்...
திருந்துபவனுக்குத்தான் சூடு
திருந்தாதவனை
சுடு.
