செய்யாமல் சாகாதே.
உணர்ச்சி என்பது
புணர்சியின் போது மட்டும்
இருந்தால் போதும் என்று
எண்ணிவிட்டாயா?
உன் வீரத்தையும்
தன்மானத்தையும்
எங்கேனும் வைத்துவிட்டாயா
அடமானம்.
உணவில்லாமல்
சாவதை காட்டிலும்,
உணர்வில்லாமல்
சாவதே அவமானம்.
’செய் அல்லது செத்துமடி’
என்று சொன்னது
செய்யாமல் சாவதற்கு அல்ல,
சாவதற்கு முன்
செய்வதற்கு.
செய்யாமல் சாகாதே.
